குமரி அரசு பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆய்வு

by Staff / 30-08-2024 04:03:57pm
குமரி அரசு பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று  ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று வருகை தந்து பல்வேறு நிகழ்சிகளில் கலந்துகொண்டார்.இன்று  குளச்சல் பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளியில்  அவர் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து பள்ளி குழந்தைகளிடம் கேட்டறிந்தார். மேலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு உட்கொள்ளும் மாணவர்களுடன் கலந்துரையாடியதை தொடர்ந்து தொடர்ந்து பள்ளியை ஆய்வுசெய்த அமைச்சர்  எண்ணும் எழுத்து வகுப்பறை, பயன்பாடில்லாத கட்டடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
தொடர்ந்து கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கருங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் திறமைகளை பாராட்டி, கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது. மேலும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளியில் மொழி சிறுபான்மையினர் அதிகம் வசிப்பதால் இப்பள்ளியில் மலையாள வழிக்கல்வி முறையிலும் பயிற்றுவிக்கப்படுகின்றது. மலையாள வகுப்பறையில் அமர்ந்து கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளைப் பார்வையிட்டதோடு, அதே பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப் பள்ளி ஆய்வு மேற்கொண்டார்.
நடைபெற்ற ஆய்வில் துறை அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
 

 

Tags :

Share via

More stories