புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு கடத்தப்பட்ட 1250 லிட்டர் சாராயம் பறிமுதல்.
மத்திய நுண்ணறிவு போலீசாருக்கு புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு அதிக அளவில் சாராயம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது, இந்த தகவலின் அடிப்படையில் மத்திய நுண்ணறிவு போலீஸ் உதவி ஆய்வாளர் இனாயத் பாஷா தலைமையிலான போலீசார் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அடுத்த பெரிய முதலியார்சாவடி சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர், அப்பொழுது அவ்வழியாக வந்த மினி லாரி ஒன்றை மடக்கி சோதனை செய்தனர் அப்பொழுது அந்த மினி லாரியில் நூதன முறையில் மீன் ஏற்றி செல்லும் டிரேவில் மறைத்து வைத்து 1 மூட்டைக்கு 25 லிட்டர் வீதம் 50 மூட்டையில் 1250 லிட்டர் புதுச்சேரி சாராயம் கடத்திச் சென்றது தெரிய வந்தது, இதனையடுத்து மினி லாரி ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் காஞ்சிபுரம் மாவட்டம் சிக்கராயபுரம் பகுதியை சேர்ந்த குமார் வயது 47 என்பது தெரியவந்தது, இதனையடுத்து அவரை கைது செய்து மினி லாரி மற்றும் வேனில் இருந்த சாராயத்தை பறிமுதல் செய்த மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் கோட்டகுப்பம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர், கோட்டகுப்பம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டுனரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், மினி லாரியில் நூதன முறையில் தமிழகப் பகுதிக்கு சாராயம் கடத்த முற்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :