இன்று தமிழக சட்ட மன்றம் கூடுகிறது

by Admin / 09-01-2023 07:18:26am
இன்று தமிழக சட்ட மன்றம் கூடுகிறது

இந்த ஆண்டின் முதல் சட்டமன்றகூட்டம் இன்று ஆளுனர் உரையுடன் காலை 10,00 மணிக்குத்தொடங்குகிறது.ஆளுனர்உரையில் மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் அவற்றை அரசு எவ்வாறு செயல்படுத்துகிறதுஎன்பது குறித்தும் அரசின் புதியகொள்கை குறித்தும் அவர் அறிக்கைவழியாக உரை நிகழ்த்துவார்.அவர் உரையைத்தொடர்ந்து சபாநாயகர் ஆளுனர்உரையின் தமிழாக்கத்தை வாசிப்பார்.அவர் வாசித்த பின்னர்  அன்றைய நிகழ்வு நிறைவு பெறும்.அதன் பின் சபாநாயகரின்அறையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும்.அதில் ,சட்ட மன்றம் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவுஎடுக்கப்பட்டு சபாநாயகர் அது குறித்து அறிவிப்பார். அடுத்த நாள் ஈரோடு எம்.எல்.ஏ.ஆக இருந்த திருமகன் ஈ.வெ.ராவின்இறப்பு குறித்த இரங்கல் தீர்மானத்துடன் அவை அன்று முழுதும் ஒத்திவைக்கப்படும்.மறுநாள் ஆளுனர் உரைக்கு நன்றி  துறைசார்ந்த அமைச்சர் பெருமக்கள் பதிலளிப்பர்.இந்த
கூட்டத்தொடர் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

Tags :

Share via

More stories