சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து - போக்குவரத்து பாதிப்பு

by Staff / 26-10-2022 11:39:28am
சரக்கு  ரயில் தடம் புரண்டு விபத்து - போக்குவரத்து பாதிப்பு

ஜார்க்கண்ட் மாநிலம் சோடர்மா மற்றும் மன்பூர் ரயில்வே நிலையங்களுக்கு இடையே இன்று காலை 6.45 மணிக்கு அவ்வழியாக நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயில் திடீரென தடம் புரண்டது. அந்த ரயிலின் 53 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டது. இதனால் ரயில் பெட்டிகளில் இருந்த நிலக்கரிகள் தண்டவாளத்தில் சிதறி கிடக்கிறது. தகவலறிந்து வந்த மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சரக்கு ரெயில் தடம் புரண்டதால் அந்த வழியாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டது. பல ரயில்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டது.

 

Tags :

Share via