காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளுக்கு கடும் கிராக்கி சண்டை போட்டு வாங்கிச் சென்ற வியாபாரிகள்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தை தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சந்தையாகும் ஆகும். இந்நிலையில் கடும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காய்கறிகளின் உற்பத்தி மிகவும் குறைந்ததாலும் சில காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து விற்பனையாகிறது.
அதனால் வியாபாரிகள் கடும் போட்டி போட்டுக் கொண்டு சண்டையிட்டு வாங்கும் நிலை ஏற்பட்டது.
குறிப்பாக ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தக்காளி விளைச்சல் இல்லாததால் ஆந்திராவில் இருந்து தக்காளி இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதால் 14 கிலோ கொண்ட ஒரு தக்காளி பாக்ஸ் 900 ரூபாய் வரை விலை போனது அதாவது ஒரு கிலோ ரூ 65 க்கு மொத்த விலையில் இன்று விற்பனையானது.
அதேபோல் ஒட்டன்சத்திரம் மேற்கு தொடர்ச்சி உள்ள மேல்மலை பகுதியான வடகவுஞ்சி. பள்ளத்து கால்வாய். பெரும்பள்ளம். பாச்சலூர். ஆகிய பகுதிகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பீன்ஸ் கிலோ அறுபது ரூபாய்க்கும். பெல்ட் அவரை கிலோ 200 ரூபாய்க்கும். பட்டர் பீன்ஸ் கிலோ 300 ரூபாய்க்கும் பச்சை மிளகாய் ஒரு கிலோ 125 முதல் 140 ரூபாய்க்கும் சவுச்சவ் கிலோ 45 ரூபாய்க்கும் இன்று விற்பனையானது.
இந்த காய்கறிகள் தரைப்பகுதிகளில் முற்றிலுமாக ஒரு கிலோ கூட உற்பத்தி ஆகாத நிலையில் மலைப்பகுதிகளில் அதுவும் மேல்மலை பகுதிகளில் கொடைக்கானல் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே குறைவான விளைச்சல் உள்ளதால் அந்த காய்கறிகளை கொண்டு வரும் வாகனத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டு கீழே இறக்கும் போது அடிதடி சண்டை போட்டுக்கொண்டு எனக்கு ஒரு மூடை எனக்கு ஒரு மூடை என்று போட்டி போட்டு வாங்கும் நிலை இன்று ஏற்பட்டது.
இந்த விலை மொத்த விலையில் விற்பனையாவதால் சில்லறை விலையில் இதன் விலை மீண்டும் ஒரு மடங்கு உயர்ந்து விற்பனையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விலை இன்னும் தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்
Tags : காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளுக்கு கடும் கிராக்கி சண்டை போட்டு வாங்கிச் சென்ற வியாபாரிகள்