வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது-சென்னை உயர்நீதி மன்றம்

by Editor / 24-11-2021 04:24:06pm
வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது-சென்னை உயர்நீதி மன்றம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று 
கடந்த அ.தி.மு.க,அரசு அறிவித்து,சட்டமும் இயற்றியது இதனை எதிர்த்து ஜெயலலிதாவின்அண்ணன் மகன்,மகள் தீபக்,தீபாஇருவரும் எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத்தொடுத்தனர்.

அதனோடு ,வேதா நிலையத்துக்கு இழப்பீடாக 67,90,00,000 நிர்ணயம் செய்து பிறப்பித்த உத்தரவையும் எதித்து வழக்கு தொடுத்திருந்தனர் இவ்விரு வழக்குகளும் நீதிபதிசேஷாயி விசாரணையில் இருந்தது.தனிநபர் சொத்துகளை கையகப்படுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும,அரசு பிறபித்த சட்டம் செல்லாது என்றும் தங்களிடம் ஆலோசிக்காது இல்லத்தை நினைவில்லமாக மாற்றியது தவறு என்று இருவர் தரப்பில் வாதட.ப்பபட்டது

இந்நிலையில்,இவ்வழக்குகளின் தீர்ப்பு இன்று மதியம் 2.15மணிக்கு வழங்கப்பட்டது, அதன்படி,ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடைமை ஆக்கி பிறப்பித்தஉத்தரவு செல்லாது எனத் தீர்ப்பு். மூன்று வாரத்திற்குள் வேதா இல்லத்தை ஒப்படைக்கவும் உத்தரவு.

 

Tags :

Share via