நெல்லையப்பர் கோவிலில் சுவாமி நடராஜருக்கு  தீபாராதனை

by Editor / 23-06-2021 08:13:15pm
 நெல்லையப்பர் கோவிலில்  சுவாமி நடராஜருக்கு  தீபாராதனை



நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவிலில் ஆனித்திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கொரோனா காரணமாக விழா நடைபெறவில்லை. இந்த நிலையில் 8-ம் திருவிழாவான செவ்வாய்  காலையில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சுவாமி நடராஜருக்கு காலையில் சிவப்பு சாத்தி சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
மாலையில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நடராஜருக்கு பச்சை சாத்தி அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து தங்க திருவோட்டை பூதம் சுமக்க தங்கச் சப்பரத்தில் வீதி உலா வரக்கூடிய கங்காளநாதர் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.
புதன்கிழமை தேரோட்டம்  கொரோனா காரணமாக  நடைபெறவில்லை.
எனவே  தேருக்கும், நெல்லையப்பர் கோவிலுக்கும் காவலாக இருக்கக்கூடிய தேரடி கருப்பசாமிக்கு தேரோட்டத்திற்கு முன்தினம் கொடை விழா நடைபெறும். அதேபோல் கருப்பசாமிக்கு கொடைவிழா நடந்தது. இதையொட்டி தேரடி கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், படப்பு தீபாராதனையும் நடந்தது. கொரோனா தொற்றுநோய் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த காட்சிகள் உள்ளூர் தொலைக்காட்களில் ஒளிபரப்பப்பட்டது.

 

Tags :

Share via

More stories