கொலை வழக்கில் நடிகை பவித்ரா கவுடா கைது

by Staff / 11-06-2024 01:28:09pm
கொலை வழக்கில் நடிகை பவித்ரா கவுடா கைது

கன்னட நடிகை பவித்ரா கவுடாவை போலீசார் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். பிரபல கன்னட நடிகர் தர்ஷன் அவரை 2வது திருமணம் செய்ததாக கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், பவித்ராவுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பிய ரேணுகா சுவாமி என்பவர் ஜூன் 8ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் போலீஸ் விசாரணையில் தர்ஷனின் பெயரைக் கூறினர். இந்த வழக்கில் தொடர்புடைய நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via