பானிபூரி கடைகளில் சோதனை - 30 கிலோ காளான் பறிமுதல்

by Staff / 07-07-2024 02:51:58pm
பானிபூரி கடைகளில் சோதனை - 30 கிலோ காளான் பறிமுதல்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மொத்தம் 13 கடைகளில் நடத்திய சோதனையில், 4 கடைகளில் ரசாயன வண்ணப் பொடி கலந்த 30 கிலோ காளான்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பானிபூரி ரசத்தை பகுப்பாய்வு செய்வதற்காக எடுத்துச் சென்றனர். மேலும், கடைகளில் இருந்த பாலித்தீன் பைகளையும் பறிமுதல் செய்து அவர்களுக்கு அபராதமும் விதித்தனர். இதோபோல், தமிழ்நாட்டின் பல இடங்களில் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 

 

Tags :

Share via