சண்டை பயிற்சியாளர், நடிகர் காலமானார்

ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் சண்டை பயிற்சியாளராக பணிபுரிந்த ஜூடோ ரத்னம் காலமானார். இவருக்கு வயது 95. குடியாத்தம் நகரில் உள்ள இல்லத்தில் வயது முதிர்வு காரணமாக இவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஜூடோ ரத்தினம் தலைநகரம் உள்ளிட்ட சில படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tags :