போட்டித்தேர்வை ரத்து செய்து நேரடி நியமனம் செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்

by Staff / 31-10-2023 01:10:06pm
போட்டித்தேர்வை ரத்து செய்து நேரடி நியமனம் செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்

2013ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித்தேர்வு என்ற நடைமுறையை ரத்து செய்து நேரடியாக பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அடுத்தகட்ட போராட்டத்தை அறிவித்துள்ளனர். ஆசிரியர்கள் போராட்டத்தை தொடங்குவதற்கு முன்பாகவே கூடுதல் கவனம் செலுத்தி, மீண்டும் ஒரு போட்டித் தேர்வு என்ற நடைமுறையை ரத்து செய்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories