பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்அரசியலில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது 88 வது பிறந்த நாளை முன்னிட்டு குடும்பத்தினருடன்இன்று அவரது சரஸ்வதி கல்லூரியில் 88 மரக்கன்றுகளை நட்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டார். இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்ள இருப்பதாகவும் இனி அரசியல் பேச மாட்டேன் என்றும் அரசியல் கூட்டங்களுக்கோ அரசியல் விவகாரங்களிலோ தலையிடையில் மாற்றம் என்றும் கட்சியின் முழு அரசியல் பொறுப்பும் நிர்வாகமும் இனி அன்புமணி ராமதாஸ் அவரது துணைவியார் இருவரும் மட்டுமே கவனித்துக் கொள்வார்கள் என்றும் தன்னை சந்திக்க வரக்கூடிய தொண்டர்கள் இனி நலம் மட்டுமே விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதோடு 2025 ஆம் ஆண்டு முதல் டாக்டர் ராமதாஸ் மகன் அன்புமணி இடையே கட்சி தலைமை காரணமாக கருத்து வேறுபாடு தோன்றி இரு பிரிவுகளாக இயங்கி வந்த நிலையில் தைலாபுரத்தில் டாக்டர் ராமதாஸின் பிறந்த நாளின் பொழுது இருவரும் சந்தித்துக் கொண்டதை அடுத்து சமரச போக்கை கடைபிடித்தனர் இதன் காரணமாக தந்தை மகன் இறையான சுமுகமான முடிவு ஏற்பட்டதை அடுத்து அன்புமணி மீதான சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடங்கப்பட்டிருந்த வழக்குகளை டாக்டர் ராமதாஸ் முழுமையாக திரும்ப பெற்றார். பாட்டாளி மக்கள் கட்சியை தோற்றுவித்து வன்னியர் சமுதாயத்திற்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு சார்ந்த நலங்களுக்காக குரல் கொடுத்த தலைவர் டாக்டர் ராமதாஸ். அவரின் கடுமையான அரசியல் முன்னெடுப்பின் காரணமாக மிகவும் பிற்படுத்தோர் துறை உருவாக்கப்பட்டு அதன் வழியாக பல்வேறு நலன்களை தம் சமூக மக்கள் பெறுவதற்காக போராடியவர்.
Tags :















.jpg)


