பலத்த இடி, மின்னலுடன் கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி

by Editor / 20-10-2024 08:45:38pm
 பலத்த இடி, மின்னலுடன் கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வந்தது. என்றும் காலை முதல் மாலை வரை வழக்கம் போல வெயிலின் தாக்கம் இருந்தது. மாலைக்கு மேல் இடி மின்னலுடன் பலத்த கனமழை பெய்தது. கீழ முடிமன், கே.துரைச்சாமிபுரம், பசுவந்தனை, வடக்கு கைலாசபுரம், சில்லங்குளம்,கப்பிகுளம், குப்பனாபுரம், ஆரைக்குளம்,உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னல் கூடிய கனமழை பெய்தது.இந்த நிலையில் இடியின் காரணமாக பசுவந்தனை குதிரைகுளம் சில்லாங்குளம் செல்லும்  காற்றாலை சாலையில் உயர் மின் கோபுரம் கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளது.அந்த வழியாக பசுவந்தனை ஊராட்சி செயலாளர் வேல்முருகன் வந்துள்ளனர். உடனடியாக மின்சார துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.பசுவந்தனை வயர்மேன்  முத்துராமன் உடனடியாக விரைந்து சென்று மின்சாரத்தை துண்டித்துள்ளனர்.
அந்த வழியாக யாரும் வராததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த மழை காரணமாக மக்காச்சோளம் உளுந்து பாசி பருத்தி விதைப்பு பணிகளை மேற்கொண்ட விவசாயிகள் இந்த கனமழையின் காரணமாக  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Tags :  பலத்த இடி, மின்னலுடன் கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி.

Share via

More stories