லாட்டரி விற்பனையாளர் மார்டின் தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை சோதனை

பிரபல லாட்டரி விற்பனையாளர் மார்ட்டினுக்கு தொடர்புடைய வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைப்பெற்று வரும் நிலையில், அவரது மருமகன் ஆதவ் அர்ஜுனின் சென்னை போயஸ் கார்டன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் லாட்டரி விற்பனை சட்டவிதிகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகிறது. லாட்டரி விற்பனையில் கோவையை சேர்ந்த மார்ட்டின் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக மார்டின் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மார்ட்டின் குரூப் ஆப் கம்பெனிஸ் அண்டு இன்ஸ்ட்டியூசன் என்ற பெயரில் கார்ப்ரேட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் தொழிலதிபர் மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லாட்டரி விற்பனையில் விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததன் காரணமாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
கவுண்டர் மில் பகுதியில் மார்ட்டின் அவரது வீட்டில் அமலாக்கதுறை சோதனை.அவரது வீட்டில் அருகே கார்ப்பரேட் அலுவலகம் அங்கும் சோதனை நடைபெறுகிறது.கவுண்டர் மேல் பகுதியில் உள்ள மாட்டின் ஓமியோபதி மெடிக்கல் கல்லூரியிலும் சோதனை நடை பெற்று வருகிறது.
Tags : லாட்டரி விற்பனையாளர் மார்டின் தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை சோதனை