இன்று மெட்ரோ ரயில் சேவை இரவு 12.00 மணி வரை நீட்டிப்பு.

by Editor / 13-10-2023 07:41:23am
இன்று மெட்ரோ ரயில் சேவை இரவு 12.00 மணி வரை நீட்டிப்பு.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (அக்.13) நடைபெற உள்ளது. போட்டியினை பாா்த்துவிட்டு திரும்பும் ரசிகா்களின் வசதிக்காக, மெட்ரோ ரயில் சேவை இரவு 12.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ரசிகா்கள், போட்டியை பாா்த்துவிட்டு திரும்பும் போது போட்டியை பாா்த்த டிக்கெட்டினை காண்பித்து எவ்வித கட்டணமும் இன்றி மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்ளலாம். ஆனால் போட்டியை காண மைதானத்திற்கு செல்லும் போது, இச்சலுகை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : இன்று மெட்ரோ ரயில் சேவை இரவு 12.00 மணி வரை நீட்டிப்பு.

Share via

More stories

Logo