மழைக்கும்,உறைபனிக்கும்  வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்.

by Editor / 22-01-2023 07:28:31am
மழைக்கும்,உறைபனிக்கும்  வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்.

இயற்கை மாற்றங்கள் காரணமாக கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும்,, தமிழக கடலோர மாவட்டங்கள், மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள்,புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,தமிழகத்தின் உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.

 

Tags : வானிலை ஆய்வு மையம்.

Share via
Logo