திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் நாட்டு பட்டாசு கண்டெடுப்பு.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரை பகுதியில் சாதாரண நாட்டு பட்டாசு கண்டெடுப்பு - காவல்துறை வெடிகுண்டு நிபுணர் குழு ஆய்வு - திருமணங்கள், கோவில் திருவிழாக்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுத்தக்கூடிய நாட்டு பட்டாசு என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரை பகுதியில் இன்று (11.03.2023) மர்ம பொருள் கிடப்பதாக திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்திற்கு வந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்த்ராஜ் மேற்பார்வையில் துரிதமாக நடவடிக்கை எடுத்து மர்ம பொருளை கண்டுபிடிக்க வெடிகுண்டு நிபுணர் குழுவுடன் சென்று ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார், காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் குழுவுடன் (Bomb Detection and Disposal Squad - BDDS) சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேற்படி வெடி பொருளை சோதனை செய்ததில், அது திருமணங்கள், கோவில் திருவிழாக்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் நாட்டு பட்டாசு என்பதும், அதுவும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது
Tags :