நாடாளுமன்ற தேர்தல்: அமித்ஷா கேரளா பயணம்

by Staff / 11-03-2023 05:37:53pm
நாடாளுமன்ற தேர்தல்: அமித்ஷா கேரளா பயணம்

கொச்சி: நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை திருச்சூர் வருகிறார். நாளை மாலை 5 மணிக்கு வடக்குநாடு கோயில் மைதானத்தில் நடைபெறும் பாஜக பேரணியிலும், திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக தலைவர்கள் கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார். கேரளாவில் இருந்து குறைந்தபட்சம் ஒரு உறுப்பினரையாவது நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். கேரளாவில் பல இடங்களை பாஜக குறிவைத்தாலும், திருச்சூரை துருப்பு சீட்டாக பார்க்கிறது. இந்தத் தொகுதியில் நடிகரும், முன்னாள் ராஜ்யசபா எம்.பி.யுமான சுரேஷ் கோபியும் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

 

Tags :

Share via