மாற்றுத்திறனாளிகள்  உதவியாளர் ஒருவருக்கும் இலவச பஸ் பயணம்

by Editor / 10-06-2021 07:11:52pm
மாற்றுத்திறனாளிகள்  உதவியாளர் ஒருவருக்கும் இலவச பஸ் பயணம்

மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி மற்றும் அவர்களுடன் செல்லும் உதவியாளர் ஒருவருக்கும் அரசுப் பேருந்தில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பெண்களுக்கு அரசு நகர பேருந்துகளில் இலவச பயணம் என்று வெளியிட்ட அறிவிப்பு பெரிய வரவேற்பை பெற்றது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலக அளவில் இந்த திட்டம் பாராட்டுகளை பெற்றது. முக்கியமாக இந்தியாவில் இருக்கும் பிற மாநில பெண்கள் பலர் இந்த திட்டம் எங்களுக்கும் வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அளவிற்கு வரவேற்பை பெற்றது.
இதையடுத்து திருநங்கைகளுக்கும் இதே திட்டம் அமல்படுத்தப்பட்டது. பெண்களுக்கு இலவச பயண அனுமதி வழங்கப்பட்ட அதே நாளில் திருநங்கைகளுக்கும் வழங்கப்பட்டாலும், அதிகாரபூர்வமாக இதை அரசும் அறிவிப்பாக வெளியிட்டு இருந்தது.இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் சாதாரண நகர அரசுப் பேருந்தில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்று திறனாளிகள் நலத்திட்டத்தில் வரையறுக்கப்பட்டு இருக்கும் 21 வகையான மாற்று திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி மற்றும் அவர்களுடன் செல்லும் உதவியாளர் ஒருவருக்கும் அரசுப் பேருந்தில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags :

Share via