வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டல்.. ஆசிட் குடித்த இளம்பெண்

by Editor / 02-07-2025 04:33:07pm
வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டல்.. ஆசிட் குடித்த இளம்பெண்

டெல்லி: 19 வயது இளம்பெண் ஒருவர், 7 ஆண்டுகளாக தன்னை காதலித்து வந்த ரெஹான் என்பவர் திருமணம் செய்ய மறுத்ததையடுத்து ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும், ரெஹான் அந்த பெண்ணை 2 முறை கருக்கலைப்பு செய்ய வைத்ததோடு, ஒன்றாக இருந்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி வந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் ரெஹானை கைது செய்துள்ளனர். அந்த இளம்பெண் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via