பாம்பு கடித்து சிறுமி பலி.. அதிர்ச்சியில் தாத்தா மரணம்.

ஒடிசா: கோபடியா கிராமத்தை சேர்ந்த அங்கிதா (15) என்ற சிறுமி நேற்று முன்தினம் (ஆக.30) விஷப்பாம்பு கடித்ததில் உயிரிழந்தார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிதா சடலத்தை பார்த்த அதிர்ச்சியில் அவர் தாத்தா பாபாஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை தொடங்குவதற்கு முன்னரே உயிரிழந்தார். இருவரின் மரணமும் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags : பாம்பு கடித்து சிறுமி பலி.. அதிர்ச்சியில் தாத்தா மரணம்.