திமுக சார்பில் புதுமுகமாக பெண்மருத்துவர் களத்தில்  குதிக்கிறாரா..?

by Editor / 20-03-2024 12:04:01am
திமுக சார்பில் புதுமுகமாக பெண்மருத்துவர் களத்தில்  குதிக்கிறாரா..?

தென்காசி: 18வது மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஏழு கட்டமாக நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதன்படி, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில்ம் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் தென்காசி மக்களவைத் தொகுதியில், திமுக சார்பில் சங்கரன்கோவிலை சேர்ந்த அரசு மருத்துவரான ராணி ஸ்ரீகுமார் போட்டியிட உள்ளார் என்ற தகவல்கள் கடந்த  2 நாட்களாக தென்காசி பாராளுமன்றத்தொகுதியை சுற்றி..சுற்றி வருகிறது.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தனுஷ் குமார், அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் போட்டியிட்ட நிலையில், திமுக வேட்பாளர் தனுஷ் குமார் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், மீண்டும் தனுஷ் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக சங்கரன்கோவிலைச் சேர்ந்த அரசு மருத்துவரான ராணி ஸ்ரீ குமாருக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமென்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்கு தனுஷ் குமார், டாக்டர் ராணி ஸ்ரீகுமார், சங்கரன்கோவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துச்செல்வி உள்ளிட்டோர் விருப்ப மனு அளித்திருந்த நிலையில், இரண்டாவது முறையாக தனுஷ் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக  தகவல் வெளியாகி வந்த நிலையில், திமுக துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, பெண்களுக்கு குறிப்பிட்ட சில தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்து, அதன் அடிப்படையில் தென்காசி நாடாளுமன்றத் தொகுதியை கேட்டு பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.(ஏற்கனவே தென்காசி தெற்குமாவட்ட செயலாளராக இருக்கும் ஜெயபாலனும் கனிமொழியின் சிபாரிசு என்பது வேறுகதை)

தென்காசி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் டாக்டர் கிருஷ்ணசாமியும், பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியனும் போட்டியிடுவார்கள் என தகவல் வெளியாகி உள்ள நிலையில், மற்றொரு கருத்தும் உலா வருகிறது பாஜக சார்பில் வாசுதேவநல்லூரை சேர்ந்த அனந்தன் அய்யாசாமிதான் வேட்பாளர் என்றும் சமூக வலைத்தளங்களில் பகீரப்பட்டுவருகிறது.இரண்டு கட்சித் தலைவர்களுக்கு மத்தியில் திமுக சார்பில் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் போட்டியிட உள்ள தகவல் தான் பரபரப்பாக தொகுதி முழுவதும் பேசும்பொருளாகியுள்ளது.இதில் முக்கியமானது என்னன்னா அரசியல்பின்புலமுள்ள 
குடும்பத்தை சேர்ந்தவர். இந்த மருத்துவர் ராணி ஸ்ரீ குமார்? டாக்டர் ராணி ஸ்ரீ குமார் பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். ராணி ஸ்ரீ குமாரின் உறவினர் பி.துரைராஜ். இவர் 1967ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பிலும், 1980ஆம் ஆண்டு அதிமுக சார்பிலும் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.இவரது உறவினர்கள் செய்தித்துறையிலும்,நீதித்துறையிலும் ,அரசியலிலும்,உள்ளனர்.மேலும் கடந்த சட்டமன்றத்தேர்தலில் இவரது கணவர் திமுக வெற்றிபெற கடுமையாக பணம் செலவுசெய்தவர்என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த காரணங்களே இவரை தற்போது முன்னிலைபப்டுத்துகின்றன.திமுக தலைமை சொன்ன புதுமுகங்கள் பட்டியலில் இவரும் இடம்பெற வாய்ப்புள்ளதாகவே பேசப்படுகிறது.

ஒருவேளை இவருக்கு திமுக வாய்ப்பு வழங்கினால் அதிமுக சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் களத்தில் குதிப்பார் என்றும்,பாஜக சார்பில் ஜான்பாண்டியன் மகள் மருத்துவர் களத்தில் குதிக்க வாய்ப்பு என்றும் தகவல்கள் தகதகக்கும் வெயில் காலத்தில் வெளியாகி மேலும் சூட்டை கிளப்பியுள்ளது.

 

Tags : திமுக சார்பில் புதுமுகமாக பெண்மருத்துவர் களத்தில்  குதிக்கிறாரா..?

Share via