மே 2-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

by Editor / 15-04-2025 02:07:59pm
மே 2-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அதிமுக செயற்குழு கூட்டம் மே 2 ம் தேதி நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில்,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் வருகின்ற 2.5.2025 வெள்ளிக் கிழமை மாலை 4.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.மாளிகையில், அவைத் தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.


கழக செயற்குழு உறுப்பினர்களான, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via