ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஆளுநர்  ஒப்புதல்  வழங்கியுள்ளார்.

by Admin / 10-04-2023 09:08:01pm
 ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு  ஆளுநர்   ஒப்புதல்  வழங்கியுள்ளார்.

சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஆளுநர்  ரவி ஒப்புதல்  வழங்கியுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி   தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் தடை சட்ட மசோதா நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிலையில், அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார் இதன் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ,மார்ச் மாதம் 23ஆம் தேதி மீண்டும் இம்மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அளிக்கப்பட்டது இந்நிலை நிலையில் ஆளுநர் என்று இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட ஆன்லைன் தடைச் சட்டம் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இச்சட்டத்தின் மூலம் பணம் வைத்து ஆண் லைன் சூதாட்டத்தில் விளையாடினால் மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனையும்  5000  ரூபாய்  அபதாரமும் இல்லை எனில் இவை  இரண்டுக்கும்  சேர்த்து தண்டனை வழங்குவதற்கான  வழிவகைகளை செய்கிறது 

. இச்சட்டம் ஆன்லைன் சூதாட்ட சூதாட்ட விளம்பரங்கள் செய்தால் அதற்கு ஓராண்டு வரை சிறை தண்டனை அல்லது ஐந்து லட்சம் வரை அபராதம் விழிப்பதற்கு சட்டம் வழிவகை செய்கிறது சூதாட்டங்களில் தண்டனை பெற்றவர்கள்  மீண்டும் அதே குற்றத்திற்காக தண்டனை பெறும் பொழுது 3 ஆண்டுகள் அல்லது ஐந்து லட்சம் முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிப்பதற்கும் இச்சட்டம் வழிவகை செய்கிறது

 

Tags :

Share via