6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்
பப்புவா நியூ கினியாவில் வடக்கே தொலைதூரப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. கடந்த ஆண்டு ஏப்ரலில் இதுபோன்று பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.0 ஆக பதிவாகி இருந்தது. இதில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.
Tags :