உள்ளாட்சித் தேர்தல்: இரண்டாம்  கட்டப் பிரசாரம் நிறைவு

by Editor / 07-10-2021 05:37:40pm
உள்ளாட்சித் தேர்தல்: இரண்டாம்  கட்டப் பிரசாரம் நிறைவு

 

விழுப்புரம், வேலூா், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோதலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு சனிக்கிழமை (அக்.9) நடைபெறுவதையொட்டி, அதற்கான இடங்களில் இன்று மாலையுடன் தோதல் பிரசாரம் நிறைவடைந்தது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோதல் முதல்கட்டமாக அக்டோபர் 6ஆம் தேதி முடிவடைந்தது. இரண்டாம் கட்டத் தேர்தலானது சனிக்கிழமை (அக். 9) நடக்கவுள்ளது.


இரண்டாம் கட்டத் தேர்தலில், 9 மாவட்டங்களில் 35 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 62 ஊராட்சி வார்டு, 626 ஊராட்சி ஒன்றிய வார்டு, 1,324 கிராம ஊராட்சித் தலைவர், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 34,65,724 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.


இந்நிலையில், தேர்தல் நடைபெறும் இடங்களுக்கான பிரசாரம் வியாழக்கிழமை  மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.மேலும் மாலை 5 மணிக்கு மேல் தேர்தலுக்கு தொடர்பில்லாத நபர்கள் ஊராட்சிகளைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் மதுபானக் கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via