இந்தி நடிகர் ராஜ்குமார்.

by Editor / 07-10-2021 05:32:56pm
இந்தி நடிகர்  ராஜ்குமார்.

 

ராஜ்குமார் ( 8 அக்டோபர் 1926 - 3 சூலை 1996) இந்தித் திரைப்பட நடிகர் ஆவார். 1940 களின் பிற்பகுதியில் மும்பையில் காவல்துறை துணை அதிகாரியாகப் பணியாற்றி, பின்னர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1952 இல் ரங்கீலி என்ற திரைப்படத்தில் முதன் முதலாய் தோன்றினார். ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 1957 திரைப்படம் மதர் இந்தியாவில் முக்கிய வேடத்தில் நடித்தார். மேலும் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வாழ்க்கைத் துறையில் 70 க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்தார்.
ராஜ்குமார் ஒரு காசுமீர் பண்டிதக் குடும்பத்தில் பலுச்சிசுத்தானம் மாநிலத்தில்"லோராளாய் "என்ற இடத்தில் 1926 அக்டோபர் 8 இல் பிறந்தார்.தற்போது இவ்வூர் பாகிஸ்தானில் உள்ளது. இந்திய பிரிவினையை ஒட்டி மும்பைக்கு இவரது குடும்பம் இடம் பெயர்ந்தது, அங்கு அவர் மும்பை காவல்துறை துணை அதிகாரியாகப் பணி புரிந்தார்.


மும்பையில் உதவி - இன்ஸ்பெக்டர் வேலையி லிருந்து விலகி சினிமாவில் 1952 முதல் நடிக்க ஆரம்பித்தார் .பல படங்களில் கதாநாயகர்க ளில் ஒருவராகவே நடித்தார் . மதர் இந்தியா படத்தில் நர்கீசின் கணவராகவும் , தில் ஏக் மந்திர் படத்தில் புற்று நோய் நோயாளியாகவும் நடித்தது இன்றும் பேசப்படுகிறது . பைகாம் படத்தில் திலீப் குமாருடனும் ,சுனில் தத் , சசிகபூர் ,பால் ராஜ் சஹானி போன்றோருடன் நடித்துள்ளார் இவ்வாறு சுமார் 70 படங்களில் நடித்துள்ளார் ..ராஜ்குமார் ஜெனிபர் (காயத்திரி) என்ற ஆங்கிலோ-இந்தியப் பெண்ணைத் திருமணம் புரிந்தார்.இவர்களுக்கு புரு ராஜ்குமார் (நடிகர்), பனினி, வஸ்தாவிக்தா (நடிகை) என 3 பிள்ளைகள் உள்ளனர்.


3 சூலை 1996 இல் 69 வயதில் அவர் தொண்டை புற்றுநோயால் இறந்தார்.[5][6][7]

 

Tags :

Share via