தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

by Admin / 19-05-2023 10:37:07pm
 தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

 

 

கோவில்பட்டியில் வள்ளுவர் நகரில் 40 ஆண்டுகளாக குடியிறுக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தியும், பத்திர பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி தாலூகா அலுவலகம் முன்பு தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 23 மற்றும் 24 பகுதியதான வள்ளுவர்நகரில் அரசு புறம்போக்கு நிலத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் மக்களுக்கு இலவச பட்டா வழங்க வலியுறுத்தியும். மேலும் அப்பகுதியில் பத்திரவு பதிவு செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தியும் கோவில்பட்டி தாலூகா முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் அதன் நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும் தங்களது கோரிக்கை மனுவினையும்  தாலூகா அலுவலகத்தில் வழங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார தலைவர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பி ஆழ்வார்சாமி, மாவட்ட இளைஞர் அணி தலைவர்  திருமுருகன்,நகர செயலாளர் மூர்த்தி, நகர பொருளாளர் செண்பகராஜ், உள்ளிட்டோர் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

.கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

 தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
 

Tags :

Share via

More stories

Logo