10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பு

by Editor / 02-03-2022 02:23:05pm
10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பு

10 மற்றும் 11ம், 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சற்றுமுன்பு வெளியிட்டுள்ளார்.
10 மற்றும் 11ம், 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சற்றுமுன்பு வெளியிட்டுள்ளார்.பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே மாதம் 2-ஆம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 5-ஆம் தேதி முதல் இருபத்தி எட்டாம் தேதி வரை 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
ஜூன் மாதம் 23ஆம் தேதி 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மே மாதம் 9ம் தேதி முதல் மே மாதம் 31ஆம் தேதி வரை 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.
10 மற்றும் 11, 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் வருகின்ற ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி தொடங்க உள்ளது.
ஜூன் மாதம் ஏழாம் தேதி பதினொன்றாம் வகுப்புக்கும், ஜூன் மாதம் 17ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மே மாதம் ஆறாம் தேதி முதல் மே மாதம் 30ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வு தற்போது இந்த ஆண்டு நடைபெற உள்ளது.

 

Tags : General Examination Notice for 10, Plus 1, Plus 2 Students

Share via