6 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை:  பீஹார் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

by Editor / 01-10-2021 03:57:30pm
6 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை:  பீஹார் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

 

ஆறு வயது சிறுமியை கடத்தி சென்று, பாலியல் தொல்லை கொடுத்த, பீஹார் மாநில வாலிபருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நாமக்கல் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.


ஒடிசா மாநிலம், பசந்தலையை சேர்ந்த குடும்பத்தினர், நாமக்கல் மாவட்டம், பாப்பிநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில், பணியாற்றி வருகின்றனர். அதே பண்ணையில், பீஹார் மாநிலம், முகியாவை சேர்ந்த, கணேஷ், 22 என்பவரும் பணியாற்றி வந்தார். அவர் மீது, பல்வேறு குற்றச்சாட்டு எழுந்ததால், அவரை வேலையை விட்டு நீக்கிவிட்டனர்.

இந்நிலையில், 2020, மே, 27 ல், ஒடிசா மாநில தம்பதியரின், 6 வயது சிறுமியை, கணேஷ் கடத்தி சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து, சிறுமியின் பெற்றொர், நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்த போலீசார், கணேசனை கைது செய்தனர்.இவ்வழக்கு, நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடந்தது.

விசாரணை செய்த நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட கணேசனுக்கு, சிறுமியை கடத்திய வழக்கில், 10 ஆண்டு சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும், பாலியல் கொடுத்த குற்றத்துக்கு, 20 ஆண்டு சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த் தண்டனையை, ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், கோவை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

 

Tags :

Share via

More stories