காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம் 5 போலீசார் பணியிடை நீக்கம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

by Staff / 13-06-2022 11:26:01am
காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம் 5 போலீசார் பணியிடை நீக்கம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி ராஜசேகர் மரணமடைந்தது  தொடர்பாக ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் உள்ளிட்ட 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி ராஜசேகர் நேற்று மாலை உயிரிழந்ததை அடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் அங்கு விசாரணை மேற்கொண்டனர். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அன்பு இந்த சம்பவம் தொடர்பாக நீதித்துறை நடுவர் விசாரணை மேற்கொள்ள உள்ளார் என்றும் முறையாக என்ன நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் எடுப்போம் என்றும் கூறினார் விசாரணைக் கைதி உயிரிழந்த வழக்கை  சிபிசிஐடிமாற்றி  உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories