ஆளுநரின் செயலுக்கு வைகோ கண்டனம்

by Staff / 12-02-2024 03:41:47pm
ஆளுநரின் செயலுக்கு வைகோ கண்டனம்

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி தனது உரையை வாசிக்காமல் தேசிய கீதம் ஒலிக்கும் முன் அவையிலிருந்து பாதியிலேயே வெளியேறியது சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆளுநர் ஆர்.என்.ரவியின் மரபு மீறிய நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உரியது. அரசுக்கு எதிராக அரசியல் சட்ட நெறிமுறைகளை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருவது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல. ஆளுநர் உரையை சட்டப்பேரவைத் தலைவர் வாசித்து அவைக்குறிப்பேட்டில் இடம்பெற செய்திருப்பது வரவேற்கத்தக்கதாகும் என கூறினார்.

 

Tags :

Share via