வயது வந்த பெண் பிள்ளையை பெற்றோர்களும்... உடன் பிறந்தார்களும் கூட தொடக்கூட மாட்டார்கள்,

by Admin / 22-09-2024 08:23:54pm
வயது வந்த பெண் பிள்ளையை பெற்றோர்களும்... உடன் பிறந்தார்களும் கூட தொடக்கூட மாட்டார்கள்,

தமிழ் மாண்புகள் செத்து விட்டனவா என்று கேட்கத் தோன்றுகிறது. குழந்தைகளுக்கு எதிராகவும் வயது வந்த பெண் பிள்ளைகளுக்கு எதிராகவும் நிகழ்த்தப்படுகிற பாலியல் கொடூரங்களை இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த தமிழ் சமூகம் எதிர்கொள்ளப் போகிறது..

பெண் பிள்ளைகளை தாயாய் தோழியாய் சகோதரியாய் ஏன் ஆதி பராசக்தியாக பார்த்த சமூகத்தில் இன்று அநியாயமாக காம பிசாசுகளால் பெண் பிள்ளைகளும் குழந்தைகளும் கொடூர பாலியல் யுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டுகொண்டிருக்கிறார்கள். தினம் தினம் எங்காவது ஒரு மூலையில் எங்கோ ஓரிடத்தில் பெண் குழந்தைகளும் பெண் பிள்ளைகளும் பெண்களும் பாலியல் வக்ரத்தில் நாசப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள். ஏன் இந்த நிலை.. பெண்ணாக பிறந்ததைத் தவிர அந்த ஜீவன்கள் என்ன தவறை செய்துவிட்டனர். அவர்களுக்குள்ளும் ஆசை, கனவு பூத்து குலுங்கி இருக்க தானே செய்யும்.. வக்ரம் பிடித்தவர்கள், எப்படி எல்லாம் வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள். நம்மோடு வாழப் பிறந்த ,அந்த ஜீவன்களை, ஏன்... வயது வித்தியாசம் இல்லாமல் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். நான்கு வயது குழந்தை மும்பையிலும் 30 வயதுக்கு உட்பட்ட மருத்துவ மாணவியும் ...ஒரு பக்கம் 80 வயது பாட்டி ,தன் பேத்தியின் கணவனாலே சீரழிக்கப்பட்டது.. படித்து கொண்டிருக்கிற பெண் டியூசனுக்கு சென்று வரும் போது சீரழிக்கப்பட்ட கொடுமை... என்ன நடக்கிறது ,,இந்த பூமியில்... இங்கே அதிகாரம் மிக்க காமப்பித்துப்பிடித்த ஆண் மிருகங்களா.. ? வாழ வேண்டும்..

 80 வயது  70 வயது  60 வயது கிழவனும் ஆசையை வென்று அடக்காமல், இன்னும் பெண் குழந்தைகளையும் பெண்களையும் வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள்..

அன்று தமிழ் சமூகத்தில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்வயதான பொியவா்களிடம் பெண் குழந்தைகளை ஒப்படைத்து விட்டு ஊருக்குச் சென்று வருவார்கள். அவர்களும் பெண் பிள்ளைகளை தாயே... அம்மா. என்று அழைத்து அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்தார்கள்.  ஜாதி- மத எந்த வித்தியாசங்கள் இல்லாமல்  இருந்து ஒருத்தரை ஒருத்தர் உறவுகளாக பார்த்து... அக்கம் பக்கத்தில் வாழ்ந்த நிலை, இன்றைக்கு உறவுகளுக்குள்ளேயே பச்சிளம் பெண் குழந்தைகளையும் வயது முதிர்ந்த பாட்டிகளையும் இச்சையோடு இரையாக்கிக் கொண்டிருக்கிற கொடூரமானவர்கள் உருவாகுவதற்கு.... இந்த சமூகத்தில் அப்படி என்ன வக்கிரம் விளைவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.. வயது வந்த பெண்பிள்ளையை பெற்றோர்களும்... உடன் பிறந்தார்கள் கூட தொடக்கூட மாட்டார்கள், நம் தமிழ் சமுதாயத்தில்.. ஆனால், இன்று எல்லாமே தலைகீழாக மாறிப் போய்விட்டது. நாமும் நாகரீகம் என்ற போர்வையில் பெண் பிள்ளைகளுக்கு முதுகு, கால், தொடை பகுதி  தெரிகிற மாதிரி எல்லாம் உடைகளை வாங்கிக் கொடுத்து அழகு பார்க்கிறோம்..

 ஆனால், அன்றைக்கு பெண் பிள்ளைகளுக்கு பாவாடை, சட்டையில் தான் அவர்கள் உலா வந்தார்கள். எந்த இடத்திலும் சின்னதாக கூட ஒரு பாலியல் ரீதியான ஒரு தூண்டுதல்.. அந்த குழந்தைகளிடமிருந்தோ.. அந்த பெண் பிள்ளைகளிடமிருந்து இன்னொரு ஆளுக்கோ வயது முதிர்ந்தவர்களுக்கோ ஏற்பட்டதில்லை. ஆனால், இன்று திரைப்படத்தில் நடிகைகள் அணிவது போன்ற ஆடைகளை குழந்தைகளும் அணிந்து பாலியல் ரீதியான உணர்வுகளை தூண்டுவதற்கு பெற்றோர்களை காரணமாக இருக்கிறார்கள்.

.. பெற்றோர்கள் கண்ணியத்துடன் பிள்ளைகளின் உடை விஷயத்தில் இருக்க வேண்டும். பெண் பிள்ளைகளை தனியாக எங்கும் அனுப்பக் கூடாது. அன்றைக்கு ஒரு பெண் வீட்டை விட்டு வெளியே சென்றால், ஒன்று குழந்தை கையில் இருக்கும். இல்லை, என்றால் வயதான யாரோ ஒருவர் துணைக்குச் செல்வார்கள். ஆனால், பெண் சுதந்திரம் என்கிற போர்வையில் நாம் முழு உரிமையை  கொடுத்து விட்டாலும் , இந்த சமூகம் பெண்ணை அப்படி பார்க்க வில்லை என்பது நிதர்சனம்..

பெண்ணை ஒரு போகப் பொருளாக -சதை பிண்டமாகத்தான் பார்க்கிறதே.... தவிர, அவளை ஒர் உயிருள்ள மனுஷியாக.,...என்றும் நம்மோடு பிறந்த ஒரு ஜீவன் என்பதை யாரும் இங்கே நினைக்கவில்லை. .சந்தர்ப்பம் கிடைக்காததால், ஒவ்வொருத்தரும் யோக்கியமானவராக உலா வந்து கொண்டிருக்கிறார்கள். பள்ளியில்... கல்லூரியில் வேலை பார்க்கும் இடத்தில் என்று சகலத்திலும் பெண்ணுக்கு பாலியல் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன..

ஆண்கள் எல்லோரும் அயோக்கியர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று நாம் சொல்வதற்கு இல்லை.. ஒரு சிலர் சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, பெண்களை பணத்திற்காக ..புகழுக்காக... படிப்பிற்காக இன்ன பிற சலுகைகளுக்காக தங்களுடைய இச்சைக்கு பலியாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகள் தான் மனிதர்களை மிருகமாக்கிக் கொண்டிருக்கின்றன.. மனித மாண்புகள் பாதுகாக்கப்பட வேண்டும்.. பண்பாட்டு விழுமியங்கள் போற்றப்பட வேண்டும்.. பெண் பிள்ளை.களுக்கு... நாம் சார்ந்திருக்கின்ற சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளை  எடுத்துரைக்க வேண்டும். அவர்கள், அதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.. பாடதிட்டங்களின் கூட முன்பிருந்தது போன்று அறம் சார்ந்த விஷயங்களை போதிக்க வேண்டும்.. இறை சார்ந்த புராண- இதிகாச கதைகள் வழியாக பல ஆண்டுகளுக்கு முன்னால் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் போதித்த பாடங்களில் நீதி- நேர்மை, தர்மம், புண்ணியம் போன்ற கருத்துக்களை  வைத்து  ஒழுக்கத்தை போதித்தார்கள்.. ஆனால், உலகளாவிய சூழலின் காரணமாக இணையதளம்- சமூக வலைதளங்கள் இன்றைக்கு இளைஞர்களை போதைக்கும் -பாலியல் எண்ணத்தை தூண்டுவதற்கும் காரணமாக இருக்கின்றன என்கிற கருத்தை நாம் முழுமையாக ஏற்றுக் கொள்ளாத முடியாது.

.காரணம்

, எல்லோரும்,இவற்றை பயன்படுத்துகிற அனைவரும். இதுபோன்ற இழி செயல்களில் ஈடுபடவில்லை .காலத்திற்குத் தக தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடையும் போது  நல்ல விஷயங்களை ஒரு மனிதன் பெற்றுக்கொள்ள வேண்டுமே தவிர ...அதில் இருக்கின்ற தவறுகளை பிரதானமாக எடுத்து... ஒருவன் மாறுவானே யானால் ..., சமூகத்தின் வரலாறுகள் அழிக்கப்படுவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு மட்டும்தான் இருக்க முடியும்... அதனால் ,நம் வீட்டுக்குள்ளே,- நம் குழந்தைகளுக்கு நல்ல கருத்துக்களை- எல்லோரோடும் இணக்கமாக செல்லக்கூடிய ....யாரையும் , பாதிக்கக்கூடிய ,எந்த செயலையும் செய்யாமல்,, சமூக ஒழுகலரோடு வாழ்வதற்கான விதைகளை தூவ வேண்டும்.. அப்பொழுதுதான், நம் தமிழ் சமூகத்தின் விழுமியங்கள் பாதுகாக்கப்படும். .பெண்ணை தெய்வமாக .பாா்க்கப்பட வேண்டாம்..ஏன், சக மனுசியாக பார்க்கப்படும் சூழல் உருவானாலே போதும்..

 

வயது வந்த பெண் பிள்ளையை பெற்றோர்களும்... உடன் பிறந்தார்களும் கூட தொடக்கூட மாட்டார்கள்,
 

Tags :

Share via