கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த மூவரை கைது செய்த காவல்துறை

by Staff / 22-09-2024 08:10:03pm
கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த மூவரை கைது செய்த காவல்துறை

சென்னை தாழம்பூரை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவி அருகில் டியூஷன் படித்து வருகிறார். நேற்று அவர் வழக்கம் போலவே டியூஷன் படித்துவிட்டு வீட்டுக்கு வராததால் பெற்றோர்கள் கவலை அடைந்து அந்தப் பெண்ணை தேடிய பொழுது எங்கும் கிடைக்கவில்லை.. இந்நிலையில் அந்தப் பெண் கிழிந்த ஆடைகளோடு ரத்தக்கரை வடிந்த நிலையில் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த பெண் தன்னை மூன்று பேர் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடத்திற்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக தெரிவித்தார்.. இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.. காவல்துறையினர் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த மூவரை கைது செய்தனர் மூவரில் இருவர் 18 வயது நிரம்ப பெறாத சிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து வழக்கு சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு மூன்று பேரையும் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். .காவல்துறைவிசாரணை நடந்து வருகிறது..

 

Tags :

Share via