கமுதி அருகே 200 ஆண்டு பழமையான ஐம்பொன் சந்தான கிருஷ்ணன் சிலை கண்டெடுப்பு
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மரக்குளம் கிராமத்தில் 100 நாள் வேலையின் போது ஒரு கிலோ 240 கிராம் எடையுள்ள சந்தான கிருஷ்ணர் ஐம்பொன் கண்டெடுக்கப்பட்டது
மரக்குளம் கிராமத்தில் வில்லால் உடைய அய்யனார் கோவில் அருகே 100 நாள் வேலை திட்ட பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்
அப்போது 1 கிலோ 240 கிராம் எடையுள்ள 200 ஆண்டுகள் பழமையான ஐம்பொன் சிலை யான தவழும் பிள்ளை சந்தான கிருஷ்ணர் சிலை கண்டெடுக்கப்பட்டது
இதையடுத்து நூறு நாள் வேலைத் திட்ட பணியாளர்கள் கிராம விஏஒ பாண்டியிடம் தகவல் தெரிவித்தனர்
கமுதி தாசில்தார் சிக்கந்தர் பபிதாவிடம் விஏஓ சிலையே ஒப்படைத்தார்
தொல்பொருள் துறை ஆய்வுக்கு பின் சிலையின் வருடம் விவரம் குறித்து தெரியவரும் என்று தாசில்தார் சிக்கந்தர் பபிதா கூறினர்
முன்னோர்கள் கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் குழந்தை பாக்கியம் வரம் வேண்டி சந்தான கிருஷ்ணர் சிலை நம் முன்னோர்கள் அப்பகுதியில் வழிபட்டதாக தொல்லியல் ஆர்வலர் ராஜகுரு தெரிவித்தார்
Tags :