100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக நாளை ஒரு முக்கிய தீர்மானம்-தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக நாளை ஒரு முக்கிய தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்திற்கு மாற்றாக கொண்டு வந்துள்ள புதிய (விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத இயக்கம் )விபிஜி ஆர் ஏ எம் ஜி சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இந்த தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. மத்திய அரசு இந்த புதிய மாற்றத்தால் தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு சுமார் 5,000 கோடி நிதிச் சுமை ஏற்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே ,பழைய எம் ஜி என் ஆர் ஈ ஜி ஏ திட்டத்தையே மீண்டும் செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்துகிறது. சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்துவது குறித்த தேர்தல் வாக்குறுதி பற்றி கேள்வி எழுப்பினா.ர் இதற்கு பதில் அளித்த போது நாளை இது தொடர்பாக தீர்மான நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.
Tags :


















