அரசுப்பள்ளி ஆசிரியை கந்து வட்டி கொடுமையால் தற்கொலை..

by Staff / 12-09-2025 09:24:31am
அரசுப்பள்ளி ஆசிரியை கந்து வட்டி கொடுமையால் தற்கொலை..

அரியலூர் மேல குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா. அரசுப்பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 9ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சத்யா தற்கொலைக்கு முன் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதே பகுதியைச் சேர்ந்த கலைவாணி, கௌசல்யா, கவிதா ஆகியோரிடம் வாங்கிய அசலுக்கு மேலாக வட்டி பணம் கொடுத்தும், டார்ச்சர் செய்ததாகவும், மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்வதாகவும் உருக்கமாக பேசியுள்ளார்.

 

Tags : அரசுப்பள்ளி ஆசிரியை கந்து வட்டி கொடுமையால் தற்கொலை..

Share via