விண்வெளி மற்றும் பாதுகாப்பு விநியோக அமைப்பு -ஏரோ டெப்கான்-25 விழாவை தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .
சென்னை நத்தம் பக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இந்தியாவின் முதன்மையான விண்வெளி மற்றும் பாதுகாப்பு விநியோக அமைப்பு -ஏரோ டெப்கான்-25 விழாவை தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின்தொடங்கி வைத்தார் .விண்வெளி மற்றும் பாதுகாப்பு சந்திப்பு முதல் நிகழ்வாகும்.. தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம், தமிழ்நாடு விண்வெளி தொழில் மேம்பாட்டு சங்கம் ,பிரான்சின் பி சி ஐ விண்வெளி ஆகியவை கலந்து கொண்டன,. இது மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆதரவுடன் நடைபெறும் நிகழ்வாகும்,. இந்நிகழ்வின் மூலம் ஏரோ டெஸ்க்கான் 2025 உள்நாட்டு மயமாக்கலை விரைவு படுத்தவும் இந்திய பங்களிப்பாளர்களை உலகளாவிய விநியோக சங்கிலிகளில் ஒருங்கிணைக்கவும் பொது தனியார் கூட்டமைப்புகளை வளர்க்கவும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.300 மேற்பட்ட நிறுவனங்களும் 1000 பிரதிகளும் 8,000 க்கு மேற்பட்ட இந்த வணிக க் கூட்டமைப்பினரும் 16 நாடுகள் வர்த்தக பணிகளை மேற்கொள்கின்றன. கண்காட்சியில் டாட்டா குழுமம், பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஹிந்துஸ்தான், ஏரோநாட்டிக்ஸ் டி .ஆர்.டி. ஓ உள்ளிட்ட இந்திய நிறுவனங்களும் ஏர் பஸ். போயிங் டசால்ட். இஸ் வெல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ். உலகளாவிய உபகரண உற்பத்தியாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.
மூன்று நாட்கள் நடைபெறும் நிகழ்வு. இத்தாலி, பிரேசில் ,போலந்து, செக் குடியரசு நாடுகளில் விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுடன் இணைந்து சென்னையில் முதல் முறையாக இது போன்ற நிகழ்வு நடந்துள்ளது.. இதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் புதிய கூட்டாளர்களை அடையாளம் காண இந்நிகழ்வு உதவும் என்றும் சொல்லப்படுகிறது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி. ஆர் பி .ராஜா அமைச்சர் டி .எம். அன்பரசன் பாராளுமன்ற உறுப்பினர் டிஆர். பாலு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரை அதிகாரி அட்மிரல் சதீஷ் எனாய் கலையிடர்ஸ் இந்தியா லிமிடெட் தலைவர் எம் சி பாலசுப்பிரமணியன் முன்னாள் டி. ஆர் ,டி. ஓ தலைவர் எஸ். கிரிஸ்டோபர் ,தாம்பரம் விமானப்படை ஏர் கமாண்டர் தபன் சர்மா ,தொழில் துறை செயலாளர் வி அருண்ராஜ் ,டிட்கோ நிர்வாக இயக்குனர் சந்திப் நந்தூரி ஆகியோர் பங்கேற்றனர்.
Tags :



















