ரூ.4 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்...
சென்னை விமான நிலையத்தில் துபாயிலிருந்து வீட்டு உபயோக பொருட்களில் மறைத்து 8 கிலோ தங்கத்தை கடத்திய இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் அதிரடி சோதனையிட்டபோது, விமானத்தில் பயணம் செய்த இருவர் வீட்டு உபயோக பொருட்களில் சுமார் 8 கிலோ 170 கிராம் தங்கத்தை கடத்தியது தெரியவந்தது.
உடனடியாக இருவரையும் கைது செய்த அதிகாரிகள், விசாரணை மேற்கோண்டு வருகின்றனர். மேலும், கடத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 4 கோடியே 3 இலட்சம் என கூறப்படுகிறது.
Tags :



















