திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - குஷ்பூ

by Staff / 20-01-2024 02:27:42pm
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - குஷ்பூ

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில்களை சுத்தம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதையடுத்து பல அரசியல் தலைவர்கள் கோவிலை போட்டிபோட்டுக்கொண்டு சுத்தம் செய்தனர். இந்நிலையில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு இன்று சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுகவுக்கு மட்டுமின்றி இங்குள்ள அனைவருக்கும் தெரியும். திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று. இது முதல்வருக்கே தெரியும் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via