கடலூர் விபத்து.. கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது

கடலூர் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மாணவர்களுடன் சென்ற போது ரயில் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த கோர விபத்திற்கு ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டது. அவர் போதையில் தூங்கியதால் கேட்டை மூடவில்லை என கூறப்படுகிறது. பங்கஜை ரயில்வே நிர்வாகம் சஸ்பெண்ட் செய்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags :