பிரதமர் சொன்னதால் தமிழில் அரசாணை -நாயினர் நாகேந்திரன்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரி கிராமத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கம் நினைவு மண்டபத்தில் வீரர் சுந்தரலிங்கம் 255 வது பிறந்த நாளை முன்னிட்டு- பாஜக மாநில தலைவர் நயினார் ராஜேந்திரன் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது:
பிரதமர் மோடி ராமேஸ்வரம் வந்த போது தமிழகத்தில் இருந்து வரும் பல கடிதத்தில் கையெழுத்து ஆங்கிலத்தில் உள்ளது என்று தெரிவித்தார். அதன் எதிரொலியாக இன்று தமிழில் மட்டுமே அரசாணை வெளியிடப்படும். தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது,
மாநில உரிமைகள் பறிக்கக்கூடாது என்பதில் எங்களுக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது. மாநில சுயாட்சி என்பது பிரிவினை வாதத்தை தூண்டும் .மாநில சுயாட்சி என்பது நமக்குத் தேவையில்லை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை இதை நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறேன்.
மக்களுக்கு காவல்துறையை பார்த்து பயம் இல்லை.
முன்பு அம்மா அரசு இருக்கும் போது காவல்துறை மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். இப்போது காவல் துறையின் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர், போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது, டாஸ்மாக்கில் ஊழல் நடந்துள்ளது இதையெல்லாம் மாற்றுவதற்கு பதிலாக மாநில சுயாட்சி என்று மக்களை திசை திருப்புகின்றனர்என்றார்.
Tags : பிரதமர் சொன்னதால் தமிழில் அரசாணை -நாயினர் நாகேந்திரன்.