திமுக இளைஞரணி மாநாடு - நிர்வாகிகளுக்கு மோதிரம் பரிசு

by Staff / 22-01-2024 02:47:15pm
திமுக இளைஞரணி மாநாடு - நிர்வாகிகளுக்கு மோதிரம் பரிசு

திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாடு நேற்று சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த நிலையில், இந்த மாநாட்டு பணிகளுக்காக உழைத்த கட்சியினரை இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார். மேலும், நிர்வாகிகளுக்கு மோதிரம் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அவரது ட்வீட் பதிவில், 'வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் வகையில் மாபெரும் வெற்றி மாநாடாக நடத்தியுள்ளோம். இரவு - பகல் பாராது அயராது உழைத்த சேலம் மாவட்ட கழகங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு அவர்களின் பணிகளை போற்றி அங்கீகரிக்கும் விதமாக கணையாழி அணிவித்து மகிழ்ந்தோம். வெற்றிக்காக தொடர்ந்து கரம் கோர்த்து உழைப்போம். இந்தியா கூட்டணியை வெல்லச் செய்வோம்' என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo