இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

by Staff / 22-01-2024 02:50:27pm
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

தலைமைச் செயலகத்தில் தமிழகத்தின் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார், அந்த வாக்காளர் பட்டியலில், மொத்த வாக்காளர்கள் - 6,18,90,348 பேர் பெயர் உள்ளது. அதில் பெண் வாக்காளர்கள் 3,14,85,724 பேரும், ஆண் வாக்காளர்கள் 3,03,96,330 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 8,294 பேரும் உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூறில் 6,60,419 வாக்காளர்களும் குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூரில் 1,72,140 வாக்காளர்கள் உள்ளனர்.

 

Tags :

Share via