ட்ரூ காலருக்கு போட்டியாக பாரத் காலர்

by Editor / 29-08-2021 07:57:45pm
ட்ரூ காலருக்கு போட்டியாக  பாரத் காலர்

கான்டாக்ட் லிஸ்டில் இல்லாதவர்களிடம் இருந்து அழைப்பு வந்தால் அவர்கள் யாரென கண்டுபிடிப்பதற்கு உதவும் செயலி தான் ட்ரூகாலர்..

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இந்த செயலியை பயன்படுத்துபவர்களின் தகவல்கள் மற்றும் மொபைலில் இருக்கும் தொடர்புகள், மெசேஜ்கள் ஆகியவை சேகரிக்கப்படும். அதேபோல் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும் போது ஓடிபி மெசேஜ் வருவதற்கு முன்பே ட்ரூகாலர் செயலை காண்பித்து விடும். அந்த அளவுக்கு விரைவாக சேவை செய்து வருகிறது.இந்த செயலியை உபயோகிப்பதில்  ஆபத்து இருப்பதாக கருதப்படுவதால் தற்போது இந்தியாவில் உள்ள ஏராளமானோர் இந்த செயலியை அன்-இன்ஸ்டால் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெங்களூரைச் சேர்ந்த இந்தியன் இன்ஸ்டிட் ஆப் மேனேஜ்மென்ட் முன்னாள் மாணவர்கள் இருவர் இணைந்து ’பாரத் காலர்’ என்ற செயலியை தயாரித்துள்ளனர்.

கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலியில் 50 மில்லியன் யூசர்களின்
டேட்டாக்களையும், உலக அளவில் ஒரு பில்லியன் யூசர்களின் பெயர்களையும் கொண்டுள்ளது
என்றும் இந்த செயலி பயனாளர்களின் தொடர்புகளை சேகரிக்கும் என்றும் இதனால் பயனாளிகளின் பிரைவசி பாதுகாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories