விஜய்க்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய நபர் தூக்கிட்டு தற்கொலை தவெக ஒன்றிய செயலாளர் மீது வழக்கு.
நாகை மாவட்டம் பிரதாபராமபுரம் கிராமத்தில் வேளாங்கண்ணி பகுதியை சேர்ந்த பரத்ராஜ் என்பவர் கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று சுவரொட்டி ஒட்டியதாக கூறப்படுகிறது. சுவரொட்டி ஒட்டிபோது தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.இதனால் மனமுடைந்த பரத்ராஜ் கீழையூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர் மீது கீழையூர் காவல் நிலையத்தில் 29 ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.
இதனிடையே காவல்துறை அந்த புகாருக்கு நடவடிக்கை எடுக்கவில்லையென சொல்லப்பட்டு வந்த நிலையில் பரத்ராஜ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.தமிழக வெற்றிக்கழக ஒன்றிய செயலாளர் திவாகர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து தனிப்படை போலீசார் விசாரணை.
Tags : விஜய்க்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய நபர் தூக்கிட்டு தற்கொலை தவெக ஒன்றிய செயலாளர் மீது வழக்கு.



















