ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்களை தடையின்றி இயங்க செய்ய வேண்டும் ஆன்லைன் கூட்டத்தில் பிரதமரிடம் வலியுறுத்தல்
பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வையில் இந்திய ஏற்றுமதியாளர்களிடையே உரையாற்றினார். அவரது உரை தற்போதைய சவால்களை எதிர்கொண்டு வாய்ப்பாக மாற்றும் ஊக்கத்தை ஏற்றுமதியாளர்களுக்கு அளித்துள்ளது.
இந்திய ஏற்றுமதி வர்த்தகத்தை ரூ.30 லட்சம் கோடி என்கிற இலக்கை எட்டிப்பிடிக்க செய்வது குறித்து பிரதமர் மோடி பங்கேற்ற ஆன்லைன் கூட்டம் நடந்தது. நாடு முழுவதும் உள்ள ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதி தொழில் சார்ந்த அமைப்பினர் ஆன்லைனில் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். திருப்பூரில் ஏ.இ.பி.சி., சார்பில் வீடியோ கான்பிரன்சிங்கில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் பங்கேற்ற ஏ.இ.பி.சி., தலைவர் சக்தி வேல் கூறியதாவது:-
பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வையில் இந்திய ஏற்றுமதியாளர்களிடையே உரையாற்றினார். அவரது உரை தற்போதைய சவால்களை எதிர்கொண்டு வாய்ப்பாக மாற்றும் ஊக்கத்தை ஏற்றுமதியாளர்களுக்கு அளித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் இந்திய ஏற்றுமதி வர்த்தகம் 30 லட்சம் கோடி என்கிற இலக்கை நிச்சயம் எட்டிப்பிடித்துவிடும். வரும் 2025 - 26 நிதியாண்டில் ரூ.75 லட்சம் கோடி வர்த்தகத்தை அடைந்துவிட முடியும். அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவேண்டும்.
இதன்மூலம் இந்திய ஏற்றுமதி வர்த்தகம் பெருகும். வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.ஏற்றுமதியாளர்களுக்கான சலுகை தொகைகளை அரசு உடனடியாக விடுவித்து நிறுவனங்களின் நிதி நிலை பாதிப்புகளை சரி செய்ய கைகொடுக்கவேண்டும்.
கன்டெய்னர் கிடைக்காததால் உற்பத்தி செய்த ஆடைகளை குறித்த காலத்துக்குள் வெளிநாடுகளுக்கு கப்பலில் அனுப்பமுடியாத நிலை ஏற்படுகிறது. இந்தியாவுக்கு தேவையான அளவு கன்டெய்னர்களை கொண்டு வரச் செய்யவேண்டும்.
அத்தியாவசிய சேவை பட்டியலில் சேர்த்து ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள் எந்த காலத்திலும் தடையின்றி இயங்க செய்ய வேண்டும் என பிரதமருக்கு ஆன்லைனிலேயே கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Tags :