சிசிடிவி இருப்பது தெரியாமல் திருடி மாட்டிக்கொண்ட இளைஞன்

by Staff / 11-04-2024 04:05:17pm
சிசிடிவி  இருப்பது தெரியாமல் திருடி மாட்டிக்கொண்ட இளைஞன்

உத்தர பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில், பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகளிடம் பணம் மற்றும் மொபைல் போனை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிசிடிவி இருப்பது தெரியாமல் பயணிகளின் அருகில் படுத்து தூங்குவது போல் நடித்து, பணம் மற்றும் 5 மொபைல் போனை அவ்னிஷ் சிங் என்ற இளைஞர் திருடி இருக்கிறார். CCTV காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து பணம் மற்றும் மொபைல் போன்களை மீட்டனர்.
 

 

Tags :

Share via

More stories