கள்ளக்காதலுக்கு இடையூறு: உணவில் விஷம் கலந்து குழந்தையை கொன்ற தாய்

by Editor / 08-04-2022 02:27:48pm
கள்ளக்காதலுக்கு இடையூறு: உணவில் விஷம் கலந்து குழந்தையை கொன்ற தாய்


குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள குளக்கச்சி கோவில் விளையை பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் கட்டிடத்தொழிலாளியான இவருக்கு மனைவி கார்த்திகா என்ற மனைவியும் 4 வயதில் சஞ்சனா என்ற மகளும், 1½ வயதில் சரண் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மதியம்  குழந்தை  சரண் திடீரென மயங்கிவிட்டதாக செல்போன் மூலம் கார்த்திகா தனது கணவர் ஜெகதீசுக்கு தெரிவித்துள்ளார். இதனால் பதற்றம் அடைந்த ஜெகதீஷ் வீட்டுக்கு ஓடி வந்து குழந்தை சரணை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், சரண் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் சரணின் உடலை ஜெகதீஷ் வீட்டுக்கு கொண்டு வந்தார்.

இதுபற்றி அறிந்த போலீசார் குழந்தையின் சாவில் சந்தேகம் இருந்தது. இதனால் ஜெகதீஷ், கார்த்திகாவை மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று துருவி, துருவி விசாரித்தனர்.அப்போது தெரிவித்ததாவது:
மார்த்தாண்டம் அருகே மாராயபுரம் பகுதியில் உள்ள ஒரு ஆலய திருவிழாவுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கார்த்திகா சென்றுள்ளார். அப்போது காய்கறி வியாபாரம் செய்து வரும் வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.தான் திருமணம் ஆகி 2 குழந்தைகளுக்கு தாய் என்பதை மறைத்து அந்த வாலிபருடன் கார்த்திகா நெருங்கி பழகி இருந்துள்ளார்.இந்தநிலையில் கார்த்திகாவுக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கும் விவரம் அந்த வாலிபருக்கு தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கார்த்திகாவை விட்டு அந்த வாலிபர் விலக தொடங்கிஉள்ளார்.ஆனால் கார்த்திகாஅந்த வாலிபரிடம் கெஞ்சியுள்ளார். அப்போது 2 குழந்தைகள் இருக்கிற உனக்கு, நான் சரிப்பட்டு வரமாட்டேன் என வாலிபர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.இந்த வார்த்தை கார்த்திகாவை மனம் மாற செய்துள்ளது.கள்ளக்காதலுக்கு தன்னுடைய 2 குழந்தைகள் தான் இடைஞ்சல் என நினைத்த கார்த்திகா குழந்தைகளையும் கள்ளக்காதலுக்காக கொலை செய்யமுடிவு செய்து அதன்படி சரணுக்கு சேமியாவில் விஷம் கலந்து கொடுத்து கொலை  விட்டு ஒன்றுமே தெரியாதது போல் நாடகமாடி உள்ளார்.இவ்வாறு கார்த்திகா தெரிவித்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.இதனைத்தொடர்ந்து கார்த்திகாவை கைது செய்தனர்.
இதற்கிடையே கார்த்திகா, மற்றொரு குழந்தையான சஞ்சனாவிற்கும் விஷம் கொடுத்தது தெரியவந்தது. அந்த குழந்தைக்கு  திருவனந்தபுரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via
Logo