சபரிமலையில் ரோப் கார் வசதி- அமைச்சர் வி என் வாசவன்

by Editor / 02-11-2024 09:18:44pm
சபரிமலையில் ரோப் கார் வசதி- அமைச்சர் வி என் வாசவன்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர் 26-ந்தேதியும், மகர விளக்கு பூஜை வருகிற ஜனவரி மாதம் 14-ந்தேதியும் நடைபெற உள்ளது. பம்பை அடிவாரத்தில்  இருந்து சபரிமலை சன்னிதானத்துக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்காக 2.7 கிலோமீட்டர் நீளமுள்ள ரோப்வே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான இறுதிக்கட்ட  கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் வனம், வருவாய், தேவசம் துறைகளின் மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அந்த கூட்டத்தில்ரோப்வே திட்டம் குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் அந்த பணிகளை விரைவில் தொடங்க முடிவு செய்யப்பட்டது.இந்த நிலையில் சபரிமலையில் ரோப் கார் வசதி
இந்த ஆண்டே பணிகள் துவக்கபட உள்ளதாக அமைச்சர் வி என் வாசவன் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில்  சபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் திட்ட பணிகள் இந்த மண்டல காலத்திலேயே துவக்கப்படும்  பம்பையிலிருந்து சன்னிதானம்  வரை   ரோப் கார் திட்டம் செயல்படுத்த  வனப்பகுதிக்கு சொந்தமான நிலம் கையகப்படுத்தப்படும் - என கேரள தேவசம் போர்டு அமைச்சர் வி என் வாசவன் தெரிவித்துள்ளார்.

 

Tags : சபரிமலையில் ரோப் கார் வசதி- அமைச்சர் வி என் வாசவன்

Share via